இன்று (10/2/2024) நமது பள்ளியில் வைத்து அகத்தியர் தமிழ் சங்கம் நடத்தும் தமிழ் இலக்கிய விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக அகத்தியர் தமிழ் சங்க தலைவர் புலவர் பா. அனிதா, பொருளாளர் சா. கிஷோர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நமது மாணவர்கள் திருக்குறள், கவிதை, விவாதம், கேள்வி-பதில் மற்றும் நடனம் மூலமாக தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தினார்கள். அகத்தியர் தமிழ் சங்க நிர்வாகிகள் நமது பள்ளி முதல்வர் அவர்களையும் மற்றும் பொறுப்பாசிரியர் அவர்களையும் கௌரவித்தனர். இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை அகத்தியர் தமிழ் சங்க நிர்வாகிகள் வழங்கினார்கள்.





